புயல் முன்னெச்சரிக்கை...புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலின் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 30) இரவு 8 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
'டிட்வா' புயல், புதுச்சேரிக் கடற்கரையை ஒட்டி நகர்ந்து செல்வதால், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அவசர காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபான விடுதிகள், மதுபானக் கடைகள் மற்றும் சாராயக் கடைகள் இன்று இரவு 8 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். மேலும், இரவு நேரங்களில் கேளிக்கை நடனம் நடைபெறும் ரெஸ்ட்ரோ பார்களையும் உடனடியாக மூட அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், புயலின் தாக்கம் காரணமாக, புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் அனைத்து விமானச் சேவைகளும் நாளை (டிசம்பர் 1) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் நெருங்குவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அரசுத் தரப்பில் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!