சூறாவளி காற்று... இண்டர்நெட் கோபுரம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்வதற்கு இணைய சேவை வசதிக்காக 2 இணையதள கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதில் ஒரு இணையதள கோபுரம் நேற்று பகல் 1 மணியளவில் சூறாவளி காற்று வீசிய நிலையில், திடீரென உடைந்து விழுந்தது. அந்த டவர் அப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வழித்தடத்தில் விழுந்தவாறு சாலையை மறைத்து கொண்டு கிடந்தது.
அப்போது அந்த பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் நடைபெறவில்லை. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அப்பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது.
திருச்செந்தூர் மின் வாரிய உதவி பொறியாளர் (பொ) முத்து பாலசுந்தர் தலைமையில் பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், உயர் அழுத்த மின்கம்பியில் இணையதள கோபுரம் கிடந்த போதிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் மின்வரில் சரிந்து கிடந்த இணையதள கோபுரத்தை அகற்றினர். இதனால் பயணியர் விடுதிசாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!