undefined

  ஒரே நாளில்  கணவன், மனைவி   பயங்கர படுகொலை... பெரும் பரபரப்பு!  

 
 

திண்டுக்கல் வேலப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சேசுராஜ் கென்னடி, ஜாமினில் வெளியே வந்த நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 8) இரவு நத்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சேசுராஜை, காரில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சேசுராஜ் உயிரிழந்தார்.

இந்த கொலை நடந்து ஒரு மணி நேரத்திற்குள், யாகப்பன்பட்டியில் வசித்து வந்த சேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகாவும் வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரே நாளில் கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இரட்டை கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கும்பலா அல்லது வேறு நபர்களா கொலை செய்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடிய போலீசார் இன்று (ஜனவரி 9) 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!