undefined

 கல்யாணமாகி 8 மாசம் தான்... காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்

 
 

தெலங்கானா விகாராபாத் மாவட்டம் தண்டூர் நகரில் இளம் பெண் ஒருவர் கணவனின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய்பூர் பகுதியை சேர்ந்த அனுஷா மற்றும் பரமேஷ் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். காதல் திருமணம் என்பதால் ஆரம்பத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது.

ஆனால் திருமணமான மூன்று மாதங்களிலேயே வரதட்சணை பிரச்சனை தலைதூக்கியது. பரமேஷ் தொடர்ந்து அனுஷாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தில் பரமேஷ் கட்டையால் அனுஷாவை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான பரமேஷை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். காதலால் தொடங்கிய வாழ்க்கை, வரதட்சணையால் முடிந்தது என மக்கள் வேதனையுடன் பேசுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!