மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்... குழந்தை உயிரிழந்ததால் கணவன் கைது!
மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதில் குழந்தை உயிரிழந்ததால், கணவனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணை, பிரசவ சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பே மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அறிவுரைத்திருந்தது. ஆனால் 35 வயதுடைய நசிமுஸேன், தனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், தானே தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்தார்.
முறையான சிகிச்சைக் கிடைக்காமல், பிரசவத்தில் ஆண் குழந்தை உயிரிழந்தது. அதன் பின்னர் உயிரிழந்த சிசுவின் உடலை,.அவர்கள் வீட்டிற்கருகே உள்ள காட்டு ஜிம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நசிமுஸேனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!