மனைவியைக் கொன்று சடலத்தின் மீது  மகளை உட்கார வைத்த ‘சைக்கோ’ கணவன்!

 


தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், சந்தேகப் பேயால் உந்தப்பட்ட கணவன் ஒருவன், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்தின் மீதே தனது 3 வயது மகளை அமர வைத்து பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்லகொண்டா கிராமத்தைச் சேர்ந்த ஷோபாரணி, தனது இரண்டாவது கணவர் நரசிம்மலுவுடன் ஏற்பட்ட பிணக்கால் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், சமாதானம் பேசுவதாகக் கூறி அழைக்கப்பட்டபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

"மகளுக்குச் சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என நயவஞ்சகமாக ஆசை காட்டி அழைத்துச் சென்ற நரசிம்மலு, வீரண்ணாபேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த நரசிம்மலு கல்லைப் போட்டு ஷோபாரணியைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார். அத்துடன் நிற்காமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி, தனது பைக்கின் முன் பக்கம் வைத்து அதன் மேல் பச்சிளம் குழந்தையை அமர வைத்துப் புதரில் வீசியுள்ளார்.

மறுநாள் காலை புதருக்கு அருகே குழந்தை அழுத சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ரத்தக்கறை படிந்த மூட்டையைக் கண்டு அதிர்ச்சியில் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். ரங்காரெட்டி போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், தலைமறைவாக இருந்த நரசிம்மலு சிக்கினார். ஹைதராபாத் லிங்கம்பள்ளியில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளனர். பெற்ற தாயின் சடலத்தின் மீதே அமர்ந்து வந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் நிலை அப்பகுதியினரை நிலைகுலையச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!