சந்தேகம்… டீசல் ஊற்றி மனைவியை எரித்த கணவன்!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன், வயது 28. டாட்டா ஏஸ் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பிரேமா, வயது 24 என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சமீப காலமாக ஆதித்யன் வேலைக்கு செல்லாமல் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகித்த பிரேமா கேட்டபோது, ஆதித்யன் அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால் கணவன்–மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலில் இருந்த பிரேமா தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டில் இருந்த டீசலை பிரேமா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த காயமடைந்த பிரேமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது 70 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது வாக்குமூலத்தின் பேரில் ஆதித்யனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!