மனைவியின் கழுத்தை அறுத்து காரை ஏற்றிய கணவன்... வேடிக்கை பார்த்த கும்பல்!
கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை நடுரோட்டில் வைத்து கணவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது. ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்த அந்த நபர், அங்கிருந்து தப்ப முயன்ற மனைவி மீது தனது காரை ஏற்றித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளான். படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் உயிருக்குத் போராடி உதவி கேட்டுப் கதறியும், அங்கிருந்த எவரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது வேதனையின் உச்சம்.
கண்கெட்டத்தனமாக நடந்த இந்தத் தாக்குதலின் போது, சுற்றியிருந்த மக்கள் மனிதாபிமானத்தை மறந்துவிட்டுத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். 1 நிமிடம் கூட தாமதிக்காமல் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் எனச் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவனைப் போலீசார் 2 மணி நேரத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்தப் படுகொலை தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், "மனிதாபிமானம் செத்துவிட்டதா?" என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, சுற்றியிருந்தவர்களின் கல்லான மனதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!