undefined

பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்து விட்டு கணவன் தலைமறைவு! 

 
 

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் (60) – கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52) தம்பதியாக இருந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே இருவரும் பிரிந்தனர். இதற்குப் பிறகு விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வாழ்ந்து வந்தார். செங்கோட்டையன் மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, ஒரு மகள் மற்றும் ஒரு மகனுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையன் தனது சொந்த சொத்தை விற்க முயன்றபோது, வாங்க முன்வந்தவர்கள் முதல் மனைவி விஜயாவின் ஒப்புதல் கையெழுத்து தேவை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் மூலம் விஜயாவை தொடர்பு கொண்ட செங்கோட்டையன், ஒத்துழைப்பு கேட்க, அதற்கு பதிலாக குறிப்பிட்ட தொகை வழங்கினால் மட்டுமே கையெழுத்து தருவேன் என விஜயா நிபந்தனை விதித்துள்ளார். கேட்ட தொகை அதிகம் என்பதால் தர முடியாது என செங்கோட்டையன் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டையன், நேற்று மதியம் பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு வள்ளலார் வீதி அருகே நடந்து சென்ற விஜயாவை கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான செங்கோட்டையனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!