undefined

 பணம் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்... கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி! 

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தை சேர்ந்த விநாயகம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து, மனைவி விஜயாவுடன் செய்யாறு டவுன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு கௌசல்யா, சோபியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக விநாயகம் எந்த வேலைக்கும் செல்லாமல் தினந்தோறும் குடித்து, மனைவியை தாக்கி, கூடுதல் மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்துவருகிறார். நேற்று இரவு, மனைவி விஜயாவுடன் வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மனைவி காய்கறி நறுக்க வைத்த கத்தியால் விநாயகத்தின் கழுத்தில் வெட்டினார். சம்பவ இடத்திலேயே விநாயகம் உயிரிழந்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விஜயாவை கைது செய்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், அதற்கான காரணமாக கணவன் அடிக்கடி தகராறு செய்து, பணம் கேட்டு தாக்கியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!