சினிமாவை மிஞ்சும் பரபரப்பு.... ஜெயிலில் இருந்து வெளியே வந்த கணவர்… ஆள் வைத்து காரிலேயே தீர்த்துக்கட்டிய மனைவி!
தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு அருகே டோர்னாலினாவைச் சேர்ந்த லாலு ஸ்ரீனு (38) லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையான அவர் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஓங்கோல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இடைவெளியில் அவரது மனைவி ஜான்சிக்கு, தம்பியின் நண்பரான கார் டிரைவர் சூரிய நாராயணாவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால், ஜெயிலில் சந்தித்தபோது மனைவியையும் மச்சானையும் கொலை செய்வதாக லாலு ஸ்ரீனு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஜான்சி, கணவர் வெளியே வருவதற்கு முன்பே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். குண்டூரைச் சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.2 லட்சம் கொலை ஒப்பந்தம் செய்து, ரூ.1 லட்சம் முன்பணமாக கொடுத்தார்.
ஜாமீனில் வெளியே வந்த லாலு ஸ்ரீனுவை ஜான்சி காரில் அழைத்துச் சென்றார். வழியில் சிறுநீர் கழிக்க காரிலிருந்து இறங்கிய போது, கண்களில் மிளகாய் பொடி தூவி கூலிப்படையினர் அவரை காரில் தூக்கிப் போட்டனர். பின்னர் ஜான்சியும் அவரது தம்பியும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். சம்பவ இடத்திலேயே லாலு ஸ்ரீனு உயிரிழந்தார். பின்னர் ஜான்சியும் தம்பியும் போலீசில் சரணடைந்தனர். கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் தலைமறைவாக உள்ளனர். சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!