“தாய்மார்களைக் கையேந்த வைத்த அரசைக் கண்டு வெட்கப்படுகிறேன்!” - சீமான் பேட்டி!
மாதம் ரூ.1000 பெறும் நிலையில் தமிழ்நாட்டுப் பெண்களை வைத்துள்ள இந்த அரசைக் கண்டு வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, ஊழல் மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசியலைத்தான் செய்து வருகின்றன என்றும், மக்கள் அரசியலை யாரும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "மாதம் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய நிலையில் பெண்களை வைத்துள்ள இந்த அரசைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன். என்னுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்களே என்று வேதனைப்படுகிறேன். கேடு கெட்ட கேவலமான ஆட்சியை நடத்திக் கொண்டு, இது தான் சாதனை என்று இந்த அரசு சொல்கிறது. மகளிர் உரிமைத் தொகையை இப்போது எதற்காகக் கொடுக்க வேண்டும்? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்" என்று ஆவேசமாகக் கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு துறையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று குற்றம் சாட்டிய சீமான், அமலாக்கத்துறை சோதனை நடத்தினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்தது போல, இப்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். பிரச்சினையை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். இதில் பா.ஜ.க-விற்குச் சதித்திட்டம் தீட்டி கொடுப்பதே தி.மு.க தான்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது என்றும், நீதிபதி இரு தரப்பையும் அழைத்துப்பேசித் தீர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!