“மிரட்டி விசிலடிக்க வைத்தேன்”... தவெக நிர்வாகி வி.எஸ்.பாபுவின் பேச்சால் சர்ச்சை!
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி வி.எஸ்.பாபு, தூய்மைப் பணியாளர் ஒருவரைத் தான் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக-விற்குத் தேர்தல் ஆணையம் அண்மையில் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தில் பேசிய வி.எஸ்.பாபு, "விசில் சின்னத்தைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் யாரும் விசில் அடிக்க வேண்டாம் என மாநகராட்சி (Corporation) அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நான் ஒரு தூய்மைப் பணியாளரிடம் 'விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன்' என மிரட்டினேன். உடனே அவர் விசில் அடித்துவிட்டார்" எனப் பகிரங்கமாகக் கூறினார்.
தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் வீடுகளில் குப்பை சேகரிக்கும்போது, மக்களின் கவனத்தை ஈர்க்கப் பல ஆண்டுகளாக விசில் அடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது 'விசில்' என்பது ஒரு அரசியல் கட்சியின் சின்னமாக இருப்பதால், அரசு தரப்பிலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அரசு ஊழியர் ஒருவரை மிரட்டித் தனது கட்சியின் அடையாளத்தைப் பயன்படுத்த வைத்ததாக ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியே மேடையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாகப் பிற அரசியல் கட்சிகள் தவெக-விற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!