undefined

“பாதுகாக்க முடியலை...” மக்களிடம் நேரில் மன்னிப்பு கோரினார் பிரதமர்... தாய்லாந்தில் பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு!

 

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு தோல்வியைச் சந்தித்துவிட்டதாகக் கூறி, அந்நாட்டின் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று மன்னிப்புக் கோரியுள்ளது, இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளில் உள்ள சுமார் 8 மாகாணங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிகபட்சமாகச் சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 126 பேர் பலியாகியுள்ளனர்.

மொத்தமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 14 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதில், 38 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்குக் காரணம், அரசு நிர்வாகத்தின் தோல்வியே என்று பல தரப்பிலிருந்தும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (நவம்பர் 29) நேரில் சென்று பார்வையிட்ட தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல், வெள்ள மேலாண்மையில் அரசின் குறைபாடுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "அரசால் உங்களைப் பாதுகாக்க முடியவில்லை" என்று கூறி, பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் மிகுந்த பணிவுடன் மன்னிப்புக் கோரினார்.

மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை உதவிகளும் உடனடியாகச் செய்யப்படும் என்றும், விரைவில் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் அனுடின் உறுதியளித்தார்.

வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் யாய் மருத்துவமனைக்கு ரூ.27.8 கோடி நன்கொடையாக வழங்குவதாகத் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் அறிவித்துள்ளார். அத்துடன், வெள்ளத்தில் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளுக்கும் அரசின் உதவிகள் மேற்கொள்ளப்படும் என்று மன்னர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!