செல்போன் வாங்கித் தரலை... பள்ளி மாணவி தற்கொலை!
பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான 13 வயது பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சன்பவம் நாக்பூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் தம்பதியரின் இரு மகள்களில் இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோரின் செல்போனைப் பயன்படுத்தி அடிக்கடி கேம்ஸ் விளையாடி வந்த சிறுமி, “தனக்கென புதிய செல்போன் வாங்கித் தர வேண்டும்” என்று பலமுறை கேட்டிருந்தார். ஆனால், 13 வயதுக்குள் தனிப்பட்ட செல்போன் தேவையில்லை என பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவிலுக்கு சென்றிருந்த தாய் மற்றும் பெரிய சகோதரி வீடு திரும்பியபோது, சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!