undefined

“நல்லா படிச்சும் சரியான வேலை கிடைக்கலை...” - இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

நாகர்கோவில் அருகே நீண்ட நாட்களாகச் சரியான வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான சரியான காரணத்தை அறியும் நோக்கில் அவரது செல்போனைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் பள்ளவிளை கங்கா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மிக்கேல். இவரது இரண்டாவது மகள் விவினா. இவர் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பை முடித்த பிறகு, விவினா பல்வேறு இடங்களில் வேலைக்காகத் தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார். இருப்பினும், அவருக்குச் சரியான வேலை எதுவும் கிடைக்காமல் காலதாமதமாகி வந்துள்ளது. இதன் காரணமாக, அவர் மிகுந்த மனச்சோர்வுடனும், விரக்தியுடனும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிரந்தர வேலை கிடைக்கும் வரை, நாகர்கோவிலில் உள்ள பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேர வேலையில் விவினா ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை தேடுவதில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால், விவினா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். அங்கு விவினாவைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, விவினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விவினாவின் தாயார் சோபா, ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், விவினாவுக்குச் சரிவர வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்ததால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு விவினாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விவினா தற்கொலைக்கான காரணத்தை விளக்கி ஏதேனும் கடிதம் எழுதி வைத்தாரா என்று அவரது வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தற்கொலைக்கான வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா அல்லது அவர் யாரிடமாவது மனக் குமுறல்களைப் பதிவு செய்துள்ளாரா என்பதை அறியும் நோக்கில், விவினாவின் செல்போனைப் போலீசார் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்படிப்பு முடித்து, வாழ்வில் உயர்வதற்குத் தயாராக இருந்த இளம்பெண் விவினா வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம், அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!