undefined

"எடப்பாடி முதல்வர் ஆவார்ன்னு நான் சொல்லவே இல்லை..” பிரபல ஜோதிடர் மறுப்பு!

 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் தென்னரசு என்கிற ரிஷியானந்தாவிடம் எடப்பாடி பழனிசாமி ஜோதிடம் பார்த்ததாகவும், அவர் மீண்டும் முதலமைச்சராவார் என ஜோதிடர் கணித்ததாகவும் பத்திரிக்கையில் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பிரபல வார இதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியில், எடப்பாடி பழனிசாமி தனது மனைவியுடன் ரிஷியானந்தாவைச் சந்தித்துத் தம்பதி சமேதராக ஜோதிடம் பார்த்ததாகவும், அவருக்குப் பலமான 'ராஜயோகம்' இருப்பதால், வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகும் யோகம் உள்ளது என்று அந்த வார இதழ் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தகவல் கடந்த இரண்டு நாட்களாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இந்தச் செய்தியால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிஷியானந்தா பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளார்:

"எடப்பாடி பழனிசாமியை நான் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை. அவர் என்னிடம் ஜோதிடம் பார்க்கவும் வரவில்லை. என்னிடமும் திமுக, அதிமுக என அனைத்துக் கட்சியினரும் வருகிறார்கள். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படுபவன் அல்ல. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நான் முன்கூட்டியே அறிவிக்க மாட்டேன். அப்படிச் செய்வது தேர்தலின் முடிவுகளில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

தனது பெயரைப் பயன்படுத்தித் தவறான செய்தியை வெளியிட்ட அந்த வார இதழ் மற்றும் ஊடக நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜோதிடர் ஒருவரே முன்வந்து இதனை மறுத்திருப்பது, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!