undefined

 ரூ1000 தரல... ஐஸ்கட்டி உடைக்கும் உளியால் நண்பன் மீது சராமாரி தாக்குதல்...  பெற்றோரின் மடியில் உயிரை விட்ட சோகம்!

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில்   காபூர் மாவட்டத்தில் பில்குவா பகுதியில் வசித்து வரும்  நண்பர்கள் அஜய் நிமேஷ் மற்றும் டிங்கூ. இருவருமே அப்பகுதியில் ஈ ரிக்க்ஷா ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சம்பவ நாளில்  அஜய் தனது நண்பர் டிங்கூ உடன் ஈ ரிக்க்ஷாவில் மது அருந்த சென்றுள்ளார்.
இருவரும் அதிகமாக மது அருந்திவிட்ட நிலையில் இருவருக்கும் இடையே ரூ1000 பணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் டிங்கூ ஐஸ் கட்டி உடைக்கும் உளியால் தனது நண்பனை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் அஜயின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.  


உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அஜய் தனது குடும்பத்தாரிடம் தனது நண்பர் டிங்கூ தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறிவிட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   இதனை அஜய்யின் குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து காவல்துறையினரிடம் கொடுத்தனர்.


இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் டிங்கூ மீது வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெறும் ரூ 1000க்கு தனது நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?