undefined

"எது கடிச்சதுன்னு தெரியல" - 3 உயிருள்ள பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு!

 

"பாம்பு கடித்தால் பதறாமல் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும்" என்று சொல்வார்கள். ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞரோ, ஒரு படி மேலே போய் தன்னைக் கடித்த பாம்பையே கையோடு ஆஸ்பத்திரிக்குத் தூக்கி வந்து ஒட்டுமொத்த மருத்துவமனையையும் அதிர வைத்துள்ளார்.

பீகார் மாநிலம் ராஜ்பூரைச் சேர்ந்த கௌதம் குமார் என்ற இளைஞர், அந்தப் பகுதியில் பாம்பு பிடிப்பதில் வல்லவர். நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே புகுந்த 3 நாகப்பாம்புகளை அவர் லாவகமாகப் பிடித்து, காட்டில் விடுவதற்காக ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த மூன்று பாம்புகளில் ஒன்று கௌதமின் கையில் "சுருக்"கெனக் கடித்தது.

பாம்பு கடித்த வேகத்தில் கௌதம் பதறவில்லை. மாறாக, தன்னைக் கடித்தது அந்த மூன்று பாம்புகளில் எது என்று அவருக்குத் தெரியவில்லை. "தவறான பாம்பைச் சொன்னால் டாக்டர் தவறான மருந்து கொடுத்து விடுவாரோ?" என்ற அதீத புத்திசாலித்தனத்தில், அந்த 3 நாகப்பாம்புகளையும் பையோடு தூக்கிக் கொண்டு நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குள் நுழைந்த கௌதம், பையில் இருந்த 3 நாகப்பாம்புகளையும் வெளியே எடுத்துக் காட்டியதும், அங்கிருந்த நர்சுகள், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். டாக்டர்கள் கூட ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர்.

உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்புகளை மீட்ட பிறகு, கௌதமுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர் டாக்டர்கள் அவரிடம், "பாம்பு கடித்தால் அதைப் பிடித்துக் கொண்டு வரத் தேவையில்லை; ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு வந்தாலே போதும். இப்படி உயிருள்ள பாம்புகளுடன் வருவது மற்ற நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தானது" என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!