undefined

கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன் - விஜய் நெகிழ்ச்சி!

 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை விஜய் வலியுறுத்தினார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், "அரசியலில் எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும், எதற்காகவும் நமது கொள்கைகளைச் சமரசம் செய்து கொள்ளக் கூடாது" என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். உங்களிடம் நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும்" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் இறுதியில், "2026 தேர்தலில் உண்மையாக, சத்தியமாக, உறுதியாக, ஒற்றுமையாக உழைப்போம்" என்று கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கையை உயர்த்தி உறுதிமொழி எடுக்க வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பூத் கமிட்டிகளை விரைவாக அமைப்பதற்கும், மகளிர் அணியின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தைத் தலைவர் விஜய்க்கு வழங்குவதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொடர்பு: வரும் மாதங்களில் மாவட்டம் வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!