undefined

"என்னை ட்ரோல் செய்தவங்களுக்கு பதக்கங்களால் பதிலளித்தேன்"...நடிகை பிரகதி உருக்கம்!

 

தன்னை இதுநாள் வரையில் ட்ரோல் செய்து வந்தவங்களுக்கு தனது பதக்கங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக நடிகை பிரகதி உருக்கமாக பேசியிருக்கிறார். ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள நடிகை பிரகதி, தான் பவர்லிப்டிங் பயிற்சி செய்தபோது எதிர்கொண்ட விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார். "நான் நடித்தாலும், ஜிம்முக்குப் போனாலும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது!" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

'3 ரோஸஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை பிரகதி, "நான் சினிமா துறையை விட்டுவிட்டுத்தான் பவர்லிப்டிங் செய்கிறேன் என்று பலரும் பேசினார்கள். ஆனால், நான் ஒருபோதும் நடிப்பை விடமாட்டேன். நடிப்புதான் எனது அடையாளம். நான் சாப்பிடுவதற்குக் காரணம் இந்தத் துறைதான். அதனால், நான் இறக்கும் வரை நடிப்பைத் தொடர்வேன்" என்று உறுதியளித்தார்.

பவர்லிப்டிங் பயிற்சியின்போது தனது உடை மற்றும் வயதைக் குறித்து வந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் வேதனையுடன் கூறினார். பலர், "இந்த வயதில் இதெல்லாம் தேவையா? ஜிம்முக்குப் போகும் உடை சரியில்லை" என்று விமர்சித்துள்ளனர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரகதி, "ஜிம்முக்குப் போகும்போது அதற்குண்டான உடைகளில்தான் செல்ல முடியும். புடவை அணிந்துகொண்டு ஜிம்முக்குப் போக முடியாது!" என்று காட்டமாகப் பதிலளித்தார். இறுதியாகப் பவர்லிப்டிங்கில் வென்ற நான்கு பதக்கங்களைக் காட்டி, "என்னை ட்ரோல் செய்த அனைவருக்கும் என்னுடைய இந்த பதக்கங்களால் பதிலடி கொடுத்துள்ளேன்" என்று பெருமையுடன் முழங்கினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!