undefined

 கிரிக்கெட்டை விட்டுவிட நினைத்தேன்... மனம் திறந்த ரோஹித்!

 
 

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு, கிரிக்கெட்டை முற்றிலும் விட்டு விடலாம் என நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். சொந்த மண்ணில் நடந்த அந்த தொடரில் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் பெற்ற இந்திய அணி, இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம், கோப்பை கனவை சிதைத்தது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித், அந்த தோல்வி தன்னை உள்ளுக்குள் முற்றிலும் நொறுக்கியதாக தெரிவித்தார். “என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை போல உணர்ந்தேன். உடலும் மனமும் காலியாகிவிட்டது” என்றார். அந்த நிலையில் இருந்து வெளியே வர இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.

ஆனால், கிரிக்கெட் மீது இருந்த காதல் தான் மீண்டும் எழச் செய்ததாக ரோஹித் சொன்னார். 2024 டி20 உலகக் கோப்பை மீது முழு கவனம் செலுத்தி, இந்தியாவை சாம்பியனாக்கினார். அதன் பின்னர் டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, 2027 ஒருநாள் உலகக் கோப்பை இலக்காக வைத்து முன்னேறி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!