சம்மனை கிழிக்கச் சொன்னது நான்தான்... முடிந்தால் என்னை கைது பண்ணுங்க... சீமான் மனைவி கயல்விழி ஆவேசம்!
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் போலீசார் கூறிய நிலையில் அவர் வேலூரில் இருந்ததால் நேற்று ஆஜராகவில்லை. இந்நிலையில் சீமான் ஆஜராகாதால் அவரது வீட்டு முன்பு போலீசார் நேற்று மீண்டும் சம்மனை ஒட்டினர். அதை ஊழியர் கிழித்ததால் கைது செய்ய வந்த இன்ஸ்பெக்டரை காவலாளி தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும் என்று சீமான் வீட்டில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் வீட்டில் நடந்தது என்ன என்று அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்தார். நேற்று போலீசார் வருவதாக கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனை கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம். போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை. போலீசார் திட்டமிட்டே அவரைக் கைது செய்துள்ளனர் என்றார்.
நடிகை விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், அந்தம்மா எத்தன நாளா பேசிட்டு இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க? "பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா?
நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா? அவர் மக்களுக்கான நேர்மையான தலைவர். நேர்மையான தலைவர் என் கணவர் சீமான்., சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி சந்திப்பார் என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!