மசூதிகளுக்கு செல்ல மாட்டேன் ... பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் ஜகதீஷ்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் பாசி பேசும் காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொலியில், “நான் மசூதிகளுக்கு சென்றதில்லை. இனியும் செல்ல மாட்டேன்” என அவர் கூறியதாக பதிவாகி உள்ளது.
மேலும், “முஸ்லிம்களிடம் வாக்கு கேட்க நான் செல்வதில்லை. அவர்களின் மகிழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை” என்றும் அவர் பேசியதாக அந்த காணொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சுரேஷ் பாசியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும், ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஏற்ற பேச்சு அல்ல என்றும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!