ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று ஜூன் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30 ம் தேதி தொடங்கி நவம்பர் 2 ம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று ஜூன் 16ம் தேதி வெளியாகியுள்ளது
முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29 ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறும் பட்சத்தில், போட்டியானது கொழும்புவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 30 ம் தேதி குவாஹாட்டி அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கான போட்டி நடைபெறும் தேதிகள்
செப்டம்பர் 30 - இந்தியா - இலங்கை, பெங்களூரு
அக்டோபர் 5 - இந்தியா - பாகிஸ்தான், கொழும்பு
அக்டோபர் 9 - இந்தியா - தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம்
அக்டோபர் 12 - இந்தியா - ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம்
அக்டோபர் 19 - இந்தியா - இங்கிலாந்து, இந்தூர்
அக்டோபர் 23 - இந்தியா - நியூசிலாந்து, குவாஹாட்டி
அக்டோபர் 26 - இந்தியா - வங்கதேசம், பெங்களூரு
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!