பகீர்... ஐசியூவில் மயக்க நிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... !
அகமதாபாத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து அதிக அளவில் தூக்க மாத்திரைகள் உட்கொண்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சபர்மதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருந்துகளின் தாக்கத்தால் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார்.
அந்த நிலையில் அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. திடீரென விழித்த பெண் அலறியதும் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை தராமல் காலம் தாழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்ணின் உடல்நிலை மோசமானதால் குடும்பத்தினர் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றினர். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் அவர் தைரியமாக சபர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!