ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலில் திடீரெனத் தோன்றிய சாமி சிலைகள் - போலீஸ் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூனம்பட்டி கிராமத்தில், தென்னமங்கலம் கண்மாய்க் கரையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தான் இந்த விசித்திரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை கோயிலுக்குச் சென்ற ஊர் மக்கள், அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதியதாக ஒரு மாரியம்மன் சிலையும், சூலாயுதமும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துக் கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் தாங்கள் எந்தப் புதிய சிலையையும் வைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்த செய்தி பரவியதும் கிராம மக்கள் அங்குத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கோயிலில் ஆய்வு நடத்தினர். மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த மாரியம்மன் சிலை மற்றும் சூலாயுதத்தைப் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்:
இந்தச் சிலைகள் வேறு ஏதேனும் கோயில்களில் இருந்து திருடிக் கொண்டு வரப்பட்டவையா? கோயிலில் புதியதாக உரிமை கோருவதற்காக யாராவது சிலைகளை வைத்தார்களா? அல்லது ஏதேனும் வேண்டுதலுக்காக ரகசியமாக வைக்கப்பட்டதா? சிலைகளை வைத்துவிட்டுச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறியப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கிராமக் கோயிலில் திடீரெனச் சிலைகள் தோன்றிய இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!