undefined

"பாகிஸ்தான் கிளம்பினா நாங்க வர்றோம்...” மரண கலாய் கலாய்த்து ஐஸ்லாந்து பதிவு!

 

2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இன்னும் ஊசலாட்டத்தில் இருக்கும் நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

இந்தியாவுடனான ராஜதந்திர மோதல் காரணமாக வங்காளதேச அணி உலகக் கோப்பையிலிருந்து விலகியது (அல்லது நீக்கப்பட்டது). அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உள்ளே வந்துள்ளது. வங்காளதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் தொடரிலிருந்து விலகலாமா என்று ஆலோசித்து வருகிறது. பிசிபி தலைவர் மோஹ்சின் நக்வி இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் விலகினால், அந்த இடத்தைப் பிடிக்க தரவரிசை அடிப்படையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி தயாராக உள்ளது.

ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பெரிய வெற்றிகளைப் பெறாவிட்டாலும், அவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் உலகப் பிரபலம். பிசிசிஐ மற்றும் ஐசிசியைக் கிண்டல் செய்வதில் இவர்கள் எப்போதுமே முன்னணியில் இருப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஹ்சின் நக்வி, இந்தியப் பிரதமர் மோடியுடன் ஆலோசித்ததாகத் தகவல்கள் வந்தாலும், பாகிஸ்தான் அணி விலகினால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். உலகக் கோப்பைக்கு முன்னதாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க வேண்டிய அணிகளின் பட்டியலில் மாற்றங்கள் வருமா என்பது பாகிஸ்தானின் முடிவைப் பொறுத்தே அமையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!