அணுசக்தி ஒப்பந்தம் இல்லையெனில் கடும் விளைவுகள்... ஈரானுக்கு 15 நாள் கெடு விதித்து டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டனில் நடைபெற்ற காசா அமைதி வாரியத்தின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்க முடியும் என்றும், இதுவே போதுமான காலம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தரப்பட்ட காலத்திற்குள் ஈரான் அர்த்தமுள்ள உடன்படிக்கைக்கு வரவில்லை எனில், அந்த நாடு மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் நேரடியாக எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் அணுசக்தித் திறன் ஏற்கனவே பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், நிலைமையை மேலும் தீவிரமாக்குவதும் தவிர்ப்பதும் ஈரானின் கைகளில்தான் உள்ளது என்றார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின்போது வெளியேறினார். தற்போது மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அவர், ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுக்கும் நோக்கில் கூடுதல் நிபந்தனைகளுடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி கெடுவால், மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்த 10 நாட்களில் ஈரானின் பதில் நடவடிக்கையைப் பொறுத்து அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!