பகீர் வீடியோ... சிந்து நதி நீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்... இந்தியாவுக்கு பாகிஸ்தான் லெப்டினண்ட் ஜெனரல் புதிய அச்சுறுத்தல்!
Updated: May 23, 2025, 11:17 IST
இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பொது சேவைகள் தொடர்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பொது சேவைகள் தொடர்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் அகமது ஷெரீஃப் சவுத்ரி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து , நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்த இந்தியா சமீபத்தில் எடுத்த நடவடிக்கையைக் குறிப்பிட்டு பேசினார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 23 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் இந்த அறிக்கைகள் வெளியாகின. 1960 ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு உலக வங்கி சமரசத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளைப் பகிர்ந்து கொள்வதை நிர்வகிக்கிறது. நீர் பயன்பாடு குறித்த வழக்கமான தகவல்களை இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!