undefined

"முடிஞ்சா 3 நாளில் இதைப் பண்ணுங்க....” விஜய்க்கும், தவெக தொண்டர்களுக்கும் திவ்யா சத்யராஜ் சவால்!

 

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்களுக்கு விடுத்துள்ள சவால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற திமுக மருத்துவ அணி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு மற்றும் கோவி. செழியன் ஆகியோருடன் திவ்யா சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

"சேலம் கூட்டத்தில் பேசிய விஜய், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்துச் சொல்கிறேன் என்கிறார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இல்லாத ஒருவருக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். தவெக கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அக்கட்சியைச் சேர்ந்த அஜித்தா நடத்தப்பட்ட விதமே அதற்குச் சான்று என்றும், கரூர், சேலம், திண்டுக்கல் கூட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பேச்சின் இறுதியில் விஜய் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் திவ்யா ஒரு சவாலை முன்வைத்தார். "தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு ஒரு சவால். இன்னும் மூன்று நாட்களுக்குள் உங்கள் தலைவர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்து, அதை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள். இதோ கவுண்ட்டவுன் ஸ்டார்ட் " என்றவர், விஜய்க்கு, "நீங்கள் கட்சியின் தலைவராக இருப்பதால், துண்டுச் சீட்டு இல்லாமல் உங்கள் கட்சியின் 10 தொண்டர்களின் பெயர்களையாவது உங்களால் சொல்ல முடியுமா? அரசியலில் தைரியம் மிக முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திவ்யா சத்யராஜ், தான் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்கள் பணி செய்வதற்காகவே திமுகவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். வருகின்ற தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!