குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றம்!
இந்தியாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 27ம் தேதி வியாழக்கிழமை மக்களவை குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவை நிறைவேற்றியது. வணிகம், கல்வி மற்றும் முதலீட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தருபவர்கள் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா "இது மிகவும் முக்கியமானது. முக்கிய பிரச்சினை என்னவென்றால், குடியேற்றம் என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விஷயமல்ல, ஆனால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும், அவர்கள் ஏன் இந்தியாவுக்கு வருகிறார்கள், எவ்வளவு காலம் இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள் என்பதை இந்த மசோதா உன்னிப்பாகக் கண்காணிப்பதை உறுதி செய்யும். இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் விவரங்களையும் அறிந்து கொள்வது முற்றிலும் அவசியம்," என 3 மணி நேர விவாதத்திற்குப் பிறகு அவர் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!