இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதி... கண் பாதிப்பால் பரபரப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஏற்பட்ட கண் பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. 73 வயதான அவரை சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2023 முதல் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் கானின் வலது கண்ணில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டதாக அவரது கட்சி தெரிவித்தது. இதனால் பார்வை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
கண் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் இஸ்லாமாபாத் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் 20 நிமிடங்கள் சிறு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்தது. தற்போது அவர் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், வதந்திகளில் உண்மை இல்லை என்றும் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!