டிப்பர் லாரி மோதல்... கார் அப்பளம் போல் நொறுங்கி 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மணப்பட்டியை சேர்ந்த அஷ்வின் (34) தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது கோர விபத்து நிகழ்ந்தது. கோவிலாப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு சென்ற காரின் மீது, திருப்பத்தூர் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென மோதியது. மோதலின் வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சுப்பிரமணியன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் கூச்சலிட்டதை கேட்டு பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த அஷ்வின், குருமூர்த்தி (24), சூர்யா (22) ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. டிப்பர் லாரி டிரைவர் செல்வகுமார் (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!