undefined

ஒரே வருடத்தில் 128 பேர்.. கொலை வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (23), கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (வயது 21) ஆகிய இருவர் மீதும் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 20.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது.

இவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஆல்பர்ட் ஜான் அவர்கள் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களுக்குப் பரிந்துரை செய்தார்.

காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில், இன்று (22.11.2025) வடபாகம் காவல் நிலைய போலீசார் ஹரிகரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கைப் பேணும் நடவடிக்கைகளின் தீவிரத்தையே இது காட்டுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!