undefined

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து... ரூ.15கோடி சேதம்!

 
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் தினமும் 1050 மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அனல்மின் நிலையம் கண்ட்ரோல் ரூமில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 3 வரை மின் உற்பத்தியாகும் லைனில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனல்மின் நிலையம், என்எல்சி, துறைமுகம், சிப்காட், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக இருந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை. 

பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இதனால் ஒன்று முதல் மூன்று யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 15 கோடி மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?