ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்... வருமான வரி செலுத்துவதில் இனி புதிய சகாப்தம்!

 

மத்திய நேரடி வரிகள் வாரியம், 6 தசாப்தங்கள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரி விதிகள் 2026-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய சட்டத் திருத்தங்கள், வரி செலுத்தும் முறையை எளிமையாக்குவதையும், தேவையற்ற சட்டச் சிக்கல்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, அரசு அங்கீகரித்துள்ள புதிய விதிகளின்படி, சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் வீட்டு வாடகைப்படி உட்பட  சலுகைகளைப் பெறுவதில் கூடுதல் தெளிவு பிறந்துள்ளதோடு, வரி விலக்கு வரம்புகளிலும் சில சாதகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய வரி நடைமுறையின் கீழ், ஆண்டு வருமானம் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்குப் பல்வேறு வரிச் சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாகக் கோரிக்கையாக இருந்த கல்வி உதவித்தொகை மற்றும் விடுதிக் கட்டணங்களுக்கான வரி விலக்கு வரம்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோருக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேலும், வருமான வரி தொடர்பான படிவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இனி பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி தாங்களாகவே கணக்குகளைத் தாக்கல் செய்யும் வகையில் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில், சில குறிப்பிட்ட நிதிப் பரிமாற்றங்களுக்கு நிரந்தரக் கணக்கு எண்ணைக் குறிப்பிடுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கான வரி வசூல் விகிதங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் இனி கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பைக் குறைப்பதன் மூலம் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான வரி நிர்வாகத்தை உருவாக்க மத்திய அரசு இப்புதிய சட்டத்தின் மூலம் உறுதியேற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!