undefined

அடுத்த 4 வருடத்தில் இந்தியா - ரஷ்யாவுக்கும் இடையே ரூ.9.16 லட்சம் கோடி வணிகம்!

 

அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ரூ.9.16 லட்சம் கோடி வணிகம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது, ரஷ்யாவுக்கான இந்திய தூதா் வினய் குமார், இந்த வணிகம் குறித்து நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தூதா் வினய் குமார் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு ரஷிய அதிபர் விலாதிமிர் புதின் இந்தியா வந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இரு நாடுகள் இடையே புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு, தடையில்லா வாணிப ஒப்பந்தம், உரம், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் புதிய வாய்ப்புகள் ஆகியவை இந்த இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

வாணிபம் பெரும்பாலும் இரு நாடுகளின் கரன்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதால், பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் போது தேசிய கரன்சிகளைப் பயன்படுத்தும் அளவு அதிகரிக்கும் என்று தூதா் வினய் குமார் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!