undefined

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்... தொடரில் 1-0 என முன்னிலை! 

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (நவம்பர் 30) ராஞ்சியில் நடைபெற்றது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்தப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்கி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக: விராட் கோலி 135 ரன்களும், கே.எல். ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

350 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன் மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் டக் அவுட் (0 ரன்) ஆகி வெளியேறினர். மார்க்ரமையும் 7 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வெளியேற்ற, தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டோனி டி சோர்சி (39 ரன்கள்) மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய பிரெவிஸ் 37 ரன்கள் எடுத்து உதவினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தபோது, மேத்யூ பிரீட்ஸ்கே உடன் ஜோடி சேர்ந்த மார்கோ ஜான்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜான்சன் வெறும் 26 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். பிரீட்ஸ்கே (72 ரன்கள்) ஒருபுறம் நிலையாக இருக்க, ஜான்சன் 39 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இந்திய அணிக்குப் பயத்தைக் கொடுத்தார். இந்தச் சவாலான கூட்டணியை ஒரே ஓவரில் காலி செய்து ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் குல்தீப் யாதவ் தான்.

இறுதி கட்டத்தில், கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் கார்பின் போஷ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இந்திய பந்துவீச்சு: இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!