கார்னர் செய்யும் அமெரிக்கா... இந்தியா சீனாவுக்கு 33 சதவீதம் ஏற்றுமதி அதிகரிப்பு!
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியா மலிவு விலையில் ரஷிய எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷிய எண்ணெய் வாங்குவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்பதற்காக 500 சதவீதம் வரை வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான “ரஷியா பொருளாதார தடை மசோதா” ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் உருவாக்கி உள்ளார். இந்த மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் அது நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்கா அதிக வரி விதிப்பதால், இந்தியா தனது ஏற்றுமதிக்காக புதிய நாடுகளை தேட தொடங்கியுள்ளது. அதில் முக்கியமாக சீனா முன்னிலையில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 1,222 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம். எண்ணெய் உணவுப் பொருட்கள், கடல்சார் தயாரிப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் மசாலா பொருட்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!