போருக்கு தயாராகும் இந்தியா ... தீவிர பயிற்சியில்  விமானப்படை!  

 
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படையினர் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக  பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக இந்த புதிய மாற்றுப்பாதையின் நம்பகத்தன்மை ஒத்திகை பயிற்சியானது, போர்க்காலம் அல்லது தேசிய அவசரநிலைகளின் போது மட்டுமே நடைபெறும்.  இந்த ஒத்திகை பயிற்சியானது பகல் மற்றும் இரவு நேரம் என இரு நேரங்களிலும் நடைபெற உள்ளது. பகல் மற்றும் இரவுகளில் போர் விமானங்களின் செயல்பாடுகளை சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான ஓடுதளம் உ.பி கங்கா அதிவிரைவு சாலையாகும்.

பகல்நேர பயிற்சிகள் முடிந்த பிறகு இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை பயிற்சி நடைபெறும். போர் விமானங்கள் ஒரு மீட்டர் உயரத்தில் தாழ்வாக பறக்கும், இதனை கண்காணிப்பதற்காக சுமார் 250 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில்  உத்தரப்பிரதேச விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (UPEIDA) இணைந்து செயல்படுகிறது. இந்த சாலையை தற்போது விமான ஓடுதளத்தை IAF தனது கட்டுப்பாட்டில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?