undefined

பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்தியா... ஜம்மு - காஷ்மீரில் கொண்டாட்டம்!  

 

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நிலைகள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தநிலையில், ஜம்முகாஷ்மீர் மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆயுதப்படைகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது.

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்: சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர்  இது குறித்து பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதியின் மனைவி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ராணுவத் தாக்குதல்களை நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இது என் கணவருக்கு ஒரு உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும் இன்று அவர் நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். “இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” என பொதுமக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?