இன்று இந்தியா–நியூஸிலாந்து மோதல்... தீவிர பயிற்சியில் வீரர்கள்!
இந்தியா–நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியிலும் ஜெயித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் தொடர்ந்து ரன்கள் சேர்ப்பார்கள் என நம்பப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் விரைவில் வெளியேறிய ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் நிலைத்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெளலிங்கில் முகமது சிராஜ் உள்ளிட்டோர் நியூஸிலாந்து பேட்டர்களுக்கு சவால் அளிக்கத் தயாராக உள்ளனர்.
நியூஸிலாந்து அணியில் டெவன் கான்வே, ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் சொதப்பிய வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் இந்த முறை தாக்கம் ஏற்படுத்த முயற்சிப்பார்கள். பெளலிங்கில் கைல் ஜேமிசன் இந்திய பேட்டர்களுக்கு மீண்டும் சவாலாக இருப்பார் என கணிக்கப்படுகிறது. இந்தப் போட்டி நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!