இந்தியா எண்ணெய் கொள்முதலை தொடர்கிறது... ரஷ்யா திட்டவட்டம்!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 2ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இத்துடன், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தவும், வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷிய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இந்தியாவிடமிருந்து வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா தனது எரிசக்தி தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து பெறுகிறது. உக்ரைன் போரின் பின்னணி காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியதாலும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், கடந்த 2025ஆம் ஆண்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!