இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்துமா? ரஷ்யா விளக்கம்!
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி, வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா வரி மற்றும் தடைகள் மூலம் தடுக்க முயற்சிக்கிறது என்று ரஷியா குற்றம்சாட்டியது.
இந்த விவகாரம் குறித்து ரஷிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விளக்கம் அளித்தார். ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என்று டிரம்ப் கூறியதாக செய்திகள் வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2025 டிசம்பரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வந்ததன் மூலம் இருநாடுகளின் உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் லாவ்ரோவ் கூறினார். இதனால் இந்தியா–ரஷியா உறவு தொடரும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!