undefined

டி 20  சூப்பர்  8 சுற்று…  இன்று இந்தியா , தென் ஆப்பிரிக்கா மோதல்!  

 

 

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து–பாகிஸ்தான் மோதல் மழையால் கைவிடப்பட்டது. குரூப் 1 பிரிவில்  இந்தியன் நேஷனல் கிரிக்கெட் டீம்,  ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் இந்தியா–தென் ஆப்பிரிக்கா மோதல் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி அதிரடி காட்டியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162 ரன்), இஷான் கிஷன் (176), ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், பும்ரா ஆகியோர் தாக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது.

தென் ஆப்பிரிக்காவும் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று வலுவாக உள்ளது. கேப்டன் மார்கிராம், டி காக், ரிக்கெல்டன் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்துவீச்சில் நிகிடி, மார்கோ யான்சென், ரபாடா ஆகியோர் ஆபத்தானவர்கள். இரு அணிகளும் சமநிலையுடன் இருப்பதால், இன்றைய போட்டி கடும் போட்டியாக அமையும். ரசிகர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!