ஐ.சி.சி வருடாந்திர டி20, ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலின்படி மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), தென் ஆப்பிரிக்கா (111), இந்தியா (105), நியூசிலாந்து (95), இலங்கை (87), பாகிஸ்தான் (78), வெஸ்ட் இண்டீஸ் (73), வங்கதேசம் (62), அயர்லாந்து (30) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!