எல்லைகளை தாண்டிய நெகிழ்ச்சி... இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி.. பாகிஸ்தான் குடும்பம் கேக் வெட்டி கொண்டாட்டம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வரலாற்று வெற்றியை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு குடும்பம் இந்திய அணியின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே இரு நாடுகளின் ரசிகர்களிடையே அதிக உணர்ச்சியும் பதற்றமும் காணப்படும். ஆனால் இந்த சூழலுக்கு மாறாக பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அவர்கள் வீட்டில் கேக் வெட்டி கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அந்த குடும்பத்தினரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். விளையாட்டு எல்லைகளை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்றும், இந்த நிகழ்வு அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!