சொந்த மண்ணில் இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி… 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!
டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு கடும் தோல்வி கிடைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 62 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த தோல்வி சொந்த மண்ணில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக பதிவானது. டிம் செய்ஃபெர்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!