undefined

  இந்திய விமானப் படை விமானம் விபத்து… பகீர் வீடியோ! 

 

உத்தரப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் புதன்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது. பிரயாக்ராஜ் அருகே பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பம்ரௌலி விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான பறவைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நேரத்தில் விமானத்தை இயக்கிய இரு விமானப் படை அதிகாரிகளும் அவசர பாராசூட் உதவியுடன் வெளியேறினர். இதனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. விமானத்தை குரூப் கேப்டன் பிரவீன் அகர்வால் மற்றும் குரூப் கேப்டன் சுனில் குமார் பாண்டே ஆகியோர் இயக்கி வந்தனர். பிரவீன் அகர்வால் ‘வாயு சேனை’ விருது பெற்ற அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக விமானப் படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ஜின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!